சிகரெட் துண்டை சாலையில் வீசினால் அபராதம்!

Wednesday, June 15th, 2016

சுவிட்சர்லாந்சிதில்   சிகரெட் பிடித்து விட்டு அதனை சாலையில் வீசும் நபர்களுக்கு ரூ.15,000 அபராதம் விதிக்கும் புதிய நடவடிக்கை அமுலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸில் உள்ள பொது இடங்களில் சிகரெட் துண்டுகளை வீசுவது, உணவு பொட்டலங்களை கண்ட இடத்தில் போட்டு செல்வது, பிளாஸ்டிக் பாட்டில்களை வீசி செல்வது உள்ளிட்ட அநாகரீக செயல்களை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் விளைவாக, ஒதுக்கப்பட்ட பொருட்களை வீதிகளில் வீசுவதை தடுக்க ஒவ்வொரு மாகாண நிர்வாகத்திற்கும் தனி அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியது.

இதனை தொடர்ந்து, சிகரெட் துண்டுகளை சாலையில் வீசும் நபர்கள் மீது மாகாண நிர்வாகங்கள் அபாரத தொகையை வசூல் செய்து வருகின்றன.

இந்நிலையில், சுவிஸின் Jura மாகாணத்தில் உள்ள Porrentruy என்ற நகராட்சியும் இந்த நடைமுறையை அமுல்படுத்த முன் வந்துள்ளது.

இந்த நகர் முழுவதும் ஒதுக்கப்பட்ட பொருட்களை கொட்டுவதற்காக குப்பை தொட்டிகள் வைக்கப்படும்.

ஆனால், இந்த குப்பை தொட்டிகளில் சிகரெட் துண்டுகளை வீசாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன் முதற்கட்டமாக, சிகரெட் துண்டுகளை சாலையில் வீசும் நபர்களுக்கு 100 பிராங்க் (15,077 இலங்கை ரூபாய்) அபாரதம் விதிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும், இது விரைவில் அமுலுக்கு வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts: