சிகரட் துண்டால் 300 கார்கள் தீக்கிரை – பெங்களூரில் சம்பவம்!

Sunday, February 24th, 2019

இந்தியாவின் – பெங்களூருவில் சிகரட் துண்டொன்றின் மூலம் பரவிய தீ விபத்தில் 300க்கும் அதிகமான கார்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.

வடக்கு பெங்களூருவின் இடம்பெற்றுவரும் விமான கண்காட்சியை காணவந்தவர்களின் கார்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளன. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் குறித்த பகுதியில் வீசப்பட்டிருந்த சிகரட் துண்டில் இருந்த தீ பொறியே இந்த பாரிய தீவிபத்துக்கான காரணம் என இந்திய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts: