சான்சலர் பதவிக்கு நான்காவது முறையாக போட்டியிடும் மெர்கல்!

Monday, November 21st, 2016

நான்காவது முறையாக சான்சலர் பதவிக்குப் போட்டியிட போவதை தன்னுடைய சிடியு கட்சியின் மூத்த உறுப்பினர்களிடம் ஜெர்மனியின் சான்சலர் ஏங்கெலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

இன்று மாலையில் இது பற்றி முறையான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என எதிர்பாப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 11 ஆண்டுகளாக ஏங்கெலா மெர்கல் ஜெர்மனியின் சான்சலராக பதவி வகித்து வருகிறார். பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வாக்களித்த பிறகு ஏற்பட்ட ஸ்திரமற்ற நேரத்திலும், அமெரிக்காவின் அடுத்த அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தலுக்குப் பிறகும் ஐரோப்பாவை நிலைநிறுத்திய ஆற்றலாக மெர்கல் பரவலாக பார்க்கப்படுகிறார்,

நிதி நெருக்கடி நேரத்திலும், யூரோ கடன் நெருக்கடியின்போதும் ஐரோப்பாவின் பெரிய பொருளாதாரத்தை சிறப்பாக செயல்பட செய்து சர்வதேச அளவில் மரியாதையை வென்றிருக்கிறார். “நம்பகரமான சிறந்த நண்பர்” என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வியாழக்கிழமை அவரை பற்றி புகழ்ந்துரைத்தார். ஆனால், ஒரு மில்லியன் குடியேறிகளை குடியேற்றுவதற்கு ஜெர்மனியின் எல்லையை திறந்துவிடும் அவருடைய முடிவால் பல வாக்காளர்கள் கோபமடைந்துள்ளதோடு, அவருடைய தனிப்பட்ட முன்னிலை வரிசையையும் குறைந்திருக்கிறது.

_92569783_54953455-1a68-480b-be77-913b2cfe2a93

Related posts: