சாட் நாட்டின் முன்னாள் அதிபருக்கு ஆயுள் தண்டனை!

Tuesday, May 31st, 2016

சாட் நாட்டின் முன்னாள் அதிபர் ஹிஸ்ஸினி ஹப்ரெ மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் புரிந்த குற்றச்சாட்டிற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தீர்ப்பு செனிகொல் நாட்டின் தலைநகரான டாக்கார் நகரில் உள்ள ஆப்ரிக்க ஒன்றியத்தின் ஆதரவு பெற்ற நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. ஆப்ரிக்காவின் பினொஷெ என்று அவரது விமர்சகர்களால் அழைக்கப்படும் ஹப்ரெ, 1982 லிருந்து 1990 வரை அவர் ஆட்சியில் இருந்த சமயத்தில் இந்த குற்றங்கள் இழைக்கப்பட்டன.

அவரின் ஆட்சி காலத்தில் நாற்பதாயிரம் மக்களை கொல்ல உத்திரவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்த அவர் நீதிமன்றத்தின் சட்டபூர்வத் தன்மையையும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

ஆப்ரிக்க ஒன்றியத்தின் ஆதரவு பெற்ற நீதிமன்றம் ஒன்று ஆப்ரிக்க நாடொன்றின் முன்னாள் தலைவர் ஒருவரை இது போன்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்த்து இதுவே முதன் முறையாகும்.

Related posts: