சவூதி அரேபியாவுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும்: கோர்பின்!
Tuesday, July 4th, 2017பிரித்தானியாவிலிருந்து சவூதி அரேபியாவுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.
யேமனில் சவூதி அரேபியாவால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு பிரித்தானியாவிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன எனவும் அதனாலேயே குறித்த ஆயுத விற்பனை நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அல் ஜசீரா எனும் ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான செய்திகள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவர் உரையாற்றுகையில்இ “சவூதி அரேபியாவால் யேமனில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு பிரித்தானிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் சவூதிக்கு பிரித்தானியாவிலிருந்து ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் நாம் தொடர்ச்சியாக கண்டனம் தெரிவித்து வருகின்றோம்” என தெரிவித்தார்.
Related posts:
|
|