சவுதி மீது யேமன் தாக்கதல் – உயர் மட்ட அதிகாரிகள் மூவர் பலி?

Saturday, October 8th, 2016

சவுதியின் இராணுவ இலக்குகளைக் குறி வைத்து யேமனிய துருப்புக்கள் நடத்திய ஆட்டிலறி தாக்குதல்களில் உயர் மட்ட தளபதிகள் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக யேமனிய பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சவுதியின் மேற்கு மாகாணமான மரிப்பின் சிர்வா மாவட்டத்தில் உள்ள சவுதியின் இராணுவ இலக்குகளைக் குறி வைத்து, நேற்று (வெள்ளிக் கிழமை) யேமனிய இராணுவத்தினர் மற்றும் அதன் கூட்டுப் படையினர் இத்தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது சவுதியின் உயர் மட்ட தளபதிகளான General Abdulrab al-Shadadi, Shayef Ameri மற்றும் Ali Hamisi ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாக, யேமனிய பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி யேமனின் அல்-மசீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை குறித்த தாக்குதல்களில் மேலும் 12 இற்கும் மேற்பட்ட சவுதி படை வீரர்களும் கொல்லப்பட்டதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் இராணுவ ஆக்கரமிப்பு என்ற பெயரில் யேமன் மீது சவுதி தொடர்ச்சியாக விமானத் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றது. இதற்கு பழி தீர்க்கும் வகையில் யேமனிய துருப்புக்களும் சவுதி இராணுவ இலக்குகளைக் குறி வைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றமை தொடர்கதையாகி விட்டது.

dcp64976464646464

Related posts: