சவுதி இளவரசர்களுக்கு கொடுக்கப்பட்ட இறுதிச் சந்தர்ப்பம்!

Sunday, November 19th, 2017

சவுதி அரேபியாவில் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள், தங்கள் சொத்துக்களை முழுமையாக அரசிடம் ஒப்படைத்தால் விடுதலை செய்ய அந்நாட்டு அதிகாரிகள் ஆலோசணை மேற்கொண்டு வருகின்றனர்.

சவுதி அரேபியாவில் கடந்த 5-ஆம் திகதி ஊழல், மோசடி மற்றும் நிதி முறைகேடுகள் சம்பந்தமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 11 அரச இளவரசர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் பொலிசாரினால் கைது செயப்பட்டனர்.

ஏனெனில் சமீபத்தில் மன்னர் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதனால் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலையீட்டின் கீழே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் தங்களின் சொத்துக்களை முழுமையாக அரசிடம் ஒப்படைத்தால் அவர்களை விடுதலை செய்ய ஆலோசனை செய்வதாக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து சவுதி அரேபிய அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும், கைது செய்யப்பட்ட 208 பேர் ஊழலின் மூலம் 100 பில்லியன் டொலருக்கு மேல் சொத்துக்கள் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related posts: