சவுதியில் விண்ணைத் தொடும் உலகின் பிரம்மாண்ட மாளிகை!

உலகளவில் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்வது சவுதி அரேபியா.
இந்த சவுதி அரேபியாவிற்கு மற்றொரு மகுடம் சூட்டும் வகையில் உலகின் மிகப்பெரிய ஹொட்டல் ஒன்று தயாராகி வருகிறது. இஸ்லாமியர்களின் புனித தளமான மெக்காவில் தான் அப்ராஜ் குடை என்ற இந்த ஹொட்டல் தயாராகி வருகிறது.
சுமார் 1.4 மில்லியன் சதுர மீற்றர்கள் பரப்பளவில் தயாராகும் இந்த பிரமாண்ட ஹொட்டல் 12 கோபுரங்கள், 45 அடுக்குமாடிகள், 10,000 அறைகளுடன் 70 உணவகங்களை கொண்ட பிரமாண்ட ஹொட்டல் ஆகும். இதுமட்டுமில்லாமல், உலகில் உள்ள அனைத்து விதமான பொழுதுபோக்கு வசதிகளும் இந்த ஹொட்டலில் ஏற்படுத்தப்பட உள்ளன.
Related posts:
சீனாவின் இணைய பாதுகாப்பு விதிமுறையால் தடுமாறும் உலக வணிகம்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்வாங்கிய கடல்!
தென் கொரிய அதிபர் மூன் ரஷ்யாவில்!
|
|