சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி!
Friday, September 29th, 2017
சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவது தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது குறித்த நடைமுறை விலக்கப்பட்டு பெண்கள் வாகனம் ஓட்டுவதற்காக உரிமங்கள் வழங்க சவூதி மன்னர் சல்மான் முடிவு செய்துள்ளார்.
சமீப காலமாக சவூதி அரசு தனது நிலைப்பாட்டில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி, சர்வதேச பெண்கள் தினம் சமீபத்தில் அரண்மனையில் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், அந்நாட்டில் உள்ள பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கு அனுமதியளிக்க மன்னர் சல்மான் முடிவு செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், ஓட்டுநர் உரிமங்கள் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் ஜூன் மாதம் தொடக்கம் இப் புதிய உத்தரவு நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவூதி மன்னரின் இந்த முடிவுக்கு பெண்கள் நல ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சவூதி மக்கள் தொகையில் ஆண்களுக்கு, நிகராக பெண்களும் சரிபாதி இடம்பிடித்து விட்ட இந்த நேரத்தில் இது போன்ற முக்கிய முடிவுகள் அவசியம் என மன்னர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Related posts:
|
|