சவுதியில் பெண்களுக்கு வாகன சாரதி உரிமம் வழங்கும் பணிகள் ஆரம்பம்!

சவுதி அரெபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்காக உரிமங்கள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சவுதி அரேபியாவின் இளவரசரான முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிப்பது, விளையாட்டு மைதானங்களுக்குள் அனுமதி, திரையரங்குகளுக்கு அனுமதி உட்பட பல சட்டங்கள் இயற்றப்பட்டன.
இந்நிலையில், சவுதி அரேபியாவில் பெண்களுக்கு வாகன சாரதி உரிமம் வழங்கும் பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. 10 பெண்களுக்கு சாரதி உரிமம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ட்ரம்பின் மசோதா வாபஸ் பெறப்பட்டது!
தொடர் அணு ஆயுத சோதனையால் ஆபத்து!
ரோஹிங்கிய அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதியில் தீப்பரவல் - சுமார் 800 வீடுகள் தீக்கிரை!
|
|