சவுதிக்கான ஆயுத விற்பனையை பிரித்தானியா தொடரவேண்டும் – பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர்!

Tuesday, February 14th, 2017

சவுதி அரேபியாவுக்கான ஆயுத விற்பனையை பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளதாக  அண்மையில் வெளியாகிய அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியின் படி, சவூதி அரேபியாவுக்கு ஆயுதம் அனுப்புவதை நிறுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி சர்வதேச வர்த்தக செயலர் லையம் ஃபொக்சுக்கு (Liam Fox) பொரிஸ் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளமை தொடர்பிலான விடயங்கள் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் கடந்த ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 140 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததன் பின்னர் ஒரு மாதத்திற்கு பிறகு, அதாவது நவம்பர் மாதமே குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் விமான படைக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வது குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு லையம் ஃபொக்ஸ் தாமதித்து வந்ததாகவும் ஆனால் பொரிஸின் வலியுறுத்தலுக்கு இணங்க லையம் ஃபொக்ஸ் குறித்த ஆயுத விற்பனைக்கு சம்மதம் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Boris-Johnson-720x418

Related posts: