சவால்களை எதிர்கொள்வதற்கு இந்திய படையினர் வலுவானவர்களே: அருண் ஜெட்லி!

இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஏற்படும் எவ்வித சவால்களையும் எதிர்கொள்வதற்கு இந்திய படையினர் வலுவானவர்கள் என இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
சீனா-இந்தியா எல்லைப் பிரச்சினை குறித்து மாநிலங்களவையில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.
இதன்போது, கடந்த 1962 ஆம் ஆண்டு போர் குறித்து சுட்டிக்காட்டிய அமைச்சர் 1948 ஆம் ஆண்டுமுதல் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் பகுதிகளை மீட்டெடுப்பதற்கு மக்கள் விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடந்த தசாப்தங்களில் இந்தியா பல சவால்களை எதிர்கொண்ட போதிலும் அத்தனை சவால்களையும் எதிர்கொண்டு நாட்டை வலுவானதாக மாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 1962 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1965 மற்றும் 1975 ஆம் ஆண்டு போர்களில் இந்திய படை வலுவடைந்துள்ளதாக அருண் ஜெட்லி சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 1962 ஆம் ஆண்டு சீனாவினால் முன்னெடுக்கப்பட்ட போரில் இந்தியா பல பின்வாங்கல்களையும் சவால்களையும் எதிர்கொண்டது. எனினும் 1965 மற்றும் 1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுடனான போரில் இந்திய வெற்றிகளை குவித்தது.
இவ்வாறிருக்க இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு இன்னமும் சவால்கள் இருப்பதாகவும் அவற்றினை எதிர்கொள்ளும் வல்லமை இந்திய வீரரர்களுக்கு இருப்பதாகவும் அமைச்சர் அருண் ஜெட்லி குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|