சர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்லும் கொரோனா !

Sunday, August 23rd, 2020

கொரோனா தொற்றுக்காரணமாக சர்வதேச ரீதியாக பலியானவர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்து 7 ஆயிரத்து 689 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் சர்வதேச ரீதியில் கொரோனா காரணமாக அதிகளவான உயிரிழப்புகள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில், 952 மரணங்கள் பதிவான நிலையில், அமெரிக்காவில் மொத்த மரணங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 80 ஆயிரத்து 152 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக மரணங்கள் பதிவான நாடாக பிரேஸில் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 823 உயிரிழப்புகள் பதிவான நிலையில், மொத்த மரணங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 14 ஆயிரத்த 277 ஆக உயர்வடைந்துள்ளது.

மூன்றாவது இடத்தில் பதிவாகியிருக்கும் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 918 மரணங்கள் பதிவான நிலையில், மொத்த மரணங்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 846 ஆக அதிகரித்துள்ளது.

Related posts: