சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை எச்சரிக்கும் அமெரிக்கா?

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு எதிராக தடைவிதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க துருப்பினர், ஆப்கானிஸ்தானில் கைதிகளுக்கு எதிராக மேற்கொண்ட துன்புறுத்தல்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
இதற்கு அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் பெல்டன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
குறித்த நீதிமன்றம் சட்டத்தன்மை இல்லாது என்றும், தங்களது நாட்டின் பிரஜைகளை பாதுகாப்பதற்கு, கூடிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2002ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த நீதிமன்றத்தில் அமெரிக்காவும் இதுவரையில் இணைந்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஹிலாரி இணையத்தள முடக்கம்!
சிமெந்தின் விலை 177 ரூபாவால் அதிகரிப்பு!
உள்நாட்டு - வெளிநாட்டு மதுபானங்களின் தரம் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை !
|
|