சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதிக்குமேலும் இரண்டு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்கள் – கடும் சீற்றத்தில் சீனா!

Saturday, July 18th, 2020

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதிக்கு மேலும் இரண்டு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்களை அமெரிக்க கடற்படை மீண்டும் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவும் அமெரிக்காவும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருகின்ற நிலையில், ஏற்கனவே தென் சீனக் கடல் பகுதியில் நங்கூரமிட்டிருந்த யு.எஸ்.எஸ் ரொனால்ட் ரேகன், யு.எஸ்.எஸ் நிமிட்ஸ் ஆகிய இரு விமானம் தாங்கிக் கப்பல்களை இன்று அமெரிக்க கடற்படை அனுப்பியுள்ளது.

கொரோனா வைரஸ் விவகாரம், ஹொங்கொங் பாதுகாப்பு சட்டம் போன்ற விவகாரங்களால் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் நீடித்துவரும் நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சீனாவை மேலும் ஆத்திரமூட்டியுள்ளது.

100,000 தொன் எடைகொண்ட இந்த கப்பல்கள் 90 அல்லது அதற்கு மேற்பட்ட விமானங்களை தாங்கக்கூடியதுடன் இதில் சுமார் 12,000 மாலுமிகளும் உள்ளனர்.

இதேவேளை இம்மாத தொடக்கத்தில் சீனா இராணுவ பயிற்சிகளை நடத்தியதற்கு வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: