சமையல் எரிவாயு கசிந்து விபத்து – ரஷ்யாவில் 4 பேர் உயிரிழப்பு!

Tuesday, January 1st, 2019

ரஷ்யாவின் மாக்னிடோகோர்ஸ்க் பகுதியில் உள்ள குடியிருப்பில் சமையல் எரிவாயு கசிந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இரு குழந்தைகள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். காணாமல் போன பலரை தேடி வருகின்றனர்.

இந்த தீவிபத்தில் அந்த குடியிருப்பு கட்டிடம் பலத்த சேதமடைந்துள்ளது. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related posts: