சமாதான முனைப்புக்கள் அதிருப்தி அளிக்கின்றது – ஐ.நா!

Friday, February 24th, 2017

இலங்கையின் சமாதான முனைப்புக்கள் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சிறுபான்மை விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி றிற்றா இஸாக் நிதியே  ( Rita Izsák-Ndiaye)  அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அவர் இந்தஅறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

நீண்டகாலமாக இடம்பெற்றுவந்த யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு ஒரேநாளில் தீர்வுவழங்க முடியாது என்பது யதார்த்தமானது என்றபோதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டுவரும் சமாதான முயற்சிகள் திருப்தி அளிக்கும்வகையில் கிடையாது என தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதிசெய்வதற்கான திடமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது என்பதனை புதிய  அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமெனவும் அதற்கான முனைப்புக்கள் எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மை மக்களை பாதுகாப்பதற்கான அரசியல் அபிலாசையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ள அவர் ஒடுக்கு முறைக்கு உள்ளான சமூகத்தினர் பாதுகாப்பாக இருப்பதனை உணரக்கூடியவகையில் தீர்வுத்திட்டங்கள் அமையவேண்டுமென வலியுறுத்தியுள்ளார். யுத்தம் காரணமாக உளவியல் பாதிப்புக்களை அழுத்தங்களை எதிர்நோக்கியோருக்கு ஆலோசனை வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டுமென  அவர்கோரியுள்ளார்.

Rita-Izsák-Ndiaye-Special-Rapporteur-on-Minority-Issues

Related posts: