சமாதானத்திற்கு மிக அருகில் நாம் – அமெரிக்க ஜனாதிபதி!

சமாதானத்திற்கு மிக அருகில் சென்றுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவுடன் நாளை இடம்பெறவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுக்களுக்கு முன்னதாக அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான இந்த சந்திப்பு மிகவும் வெற்றியளிக்கும் என தாம் கருதுவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துள்ள அமெரிக்க ஜனாதிபதி மற்றும் வடகொரிய தலைவர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சிங்கப்பூரில் இடம்பெறவுள்ள நிலையில் இரண்டு நாட்டு தலைவர்களும் நேற்று சிங்கப்பூர் சென்றடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் சிங்கப்பூர் பிரதமரை சந்திக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாகிஸ்தான் மீதான தாக்குதல் எதிரொலி: பங்குசந்தையில் வீழ்ச்சி!
இந்தியாவுக்கு நன்றி கூறிய பாகிஸ்தான் !
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் – இந்தியவீரர்கள் நால்வர் பலி!
|
|