சதாமுக்கு நேர்ந்த கதியை ட்ரம்ப் சந்திக்க நேரிடும் – ஈரான் ஜனாதிபதி மிரட்டல்!

Tuesday, September 25th, 2018

ஈராக் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசேனுக்கு நேர்ந்த கதியைத்தான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சந்திக்க நேரிடும் என ஈரான் ஜனாதிபதி ரவுகாணி எச்சரித்துள்ளார்.

பயங்கரமான அழிவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக கூறி ஈரானின் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அந்தத் தடைகளால் ஈரானின் பொருளாதாரம் கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. விலைவாசி பன்மடங்கு அதிகரித்துள்ளதால் அந்த நாட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானுடன் வர்த்தக உறவுகளை வைத்து கொள்ளக்கூடாது எனவும் அமெரிக்கா தொடர்ந்து நிர்பந்தித்து வருகிறது. இதனால் மேலும் பல சிக்கல்களை ஈரான் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இந்த நிலையில் ஈராக் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசேனுக்கு நேர்ந்த கதியைத்தான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சந்திக்க நேரிடும் என ஈரான் ஜனாதிபதி ரவுகாணி எச்சரித்துள்ளார்.

நாட்டு மக்களுடன் வானொலி மூலம் உரையாற்றிய ஈரான் ஜனாதிபதி ஹஸன்  ரவுகாணி, 1980 களில் ஈரான் மீது போர் தொடர்ந்த சதாம் உசேனுக்கு ஏற்பட்ட அதேகதி அமெரிக்காவுக்கும் ட்ரம்புக்கும் ஏற்படும். அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு பயந்து ஏவுகணைளை நாங்கள் கைவிட முடியாது என அவர் தெரிவித்தார்.

Related posts: