சட்ட விரோத தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட 75 பேருக்கு சீனாவில் தடுப்புக்காவல்!

சீனாவில் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை பரிசோதனை மூலம் கண்டறிந்து தெரிவிக்கும் சட்ட விரோத தொழிலில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்பட்ட 75 பேரை போலிசார் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.
இந்த ரகசிய தொழிலில் ஈடுபடுவடுவர்கள் கருவில் உள்ள குழந்தையின் ரத்த மாதிரிகளை எடுத்து சீன பெரு நிலப்பரப்பிலிருந்து ஹாங்காங்கிற்கு அனுப்புவார்கள் என்று கிழக்கு சீன மாகாணமான ஜஜியாங்கில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்குதான் பாலினத்தை தீர்மானிக்கும் சோதனை நடத்தப்படுகிறது.
சீனா முழுவதும் பரவலாக நடந்துவரும் இந்த சட்டவிரோத சேவையில் குறைந்தது 300 பேர் ஈடுபட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.
ஆண் குழந்தைகள் வேண்டி எதிர்பார்த்து காத்திருக்கும் பெற்றோர்களை குறிவைத்து இந்த சேவை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆவணங்கள் கசிந்ததது எப்படி?: சிறப்புக் குழு அமைக்கிறது பனாமா
2 ஆண்டுகளுக்கு பின்னர் மாயமான மலேசிய விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு!
தெற்காசிய நாடுகளுக்கான செயற்கைகோள் விண்ணுக்கு சென்றது!
|
|