சசிகலா வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Monday, September 26th, 2016
 
மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
சசிகலா புஷ்பாவின் முன் ஜாமின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.அதே வேளையில் வழக்கு தொடர்பாக அக்டோபர் 3, 7ம் திகதிகளில் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் சசிகலா புஷ்பா ஆஜராக உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கை 6 மாத காலத்திற்கு ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா புஷ்பா கூறியதாவது,முதல்வர் கேட்டால் வேண்டுமானால் நாடாளுமன்ற பதவியை ராஜினாமா செய்துவிடுவேன். அவர்களுக்கு பின்னால் இருக்கும் கும்பல் கேட்டால் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் கிடையாது என கூறியுள்ளார்.
முதல்வர் மீது எனக்கு நல்ல மரியாதை உள்ளது. ஆனால். அவர் பின்னால் இருந்து கொண்டு ஆட்டி வைப்பவர்களை ஜெயலலிதா அடையாளம் கண்டுக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

sasikala pushpa 600 11

Related posts: