சசிகலா புஸ்பாவிற்கு 24 மணி நேர பொலிஸ்

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஸ்பாவிற்கு 24 மணி நேர பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக சசிகலா புஸ்பாவினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கதல் செய்யப்பட்ட மனு நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணி நேர பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும் அங்கு அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வின் தலைமையால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஸ்பா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதற்காக கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறும் டெல்லி பொலிஸ் ஆணையாளர், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் டெல்லி மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|