சசிகலாவின் தண்டனைக்காலம் அதிகரிக்கும் –  ரூபா

Sunday, July 23rd, 2017

பெங்களூர் சிறையில் சசிகலா விதிமுறைகளை மீறியமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் உறுதிசெய்யப்படுமாயின், அவருக்கான தண்டனை காலம் மேலும் அதிகரிக்கக்கூடும் என பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ரூபா தெரிவித்துள்ளார்.

சசிகலாவுக்கு சிறையில் செய்து கொடுக்கப்பட்ட சிறப்பு வசதிகள் குறித்து அவர் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ”சசிகலா சிறையில் இல்லாமல் சிறைக்கு வெளியே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. ஆனால், அதனை என்னால் இன்னும் உறுதிசெய்ய முடியவில்லை. அது உறுதிசெய்யப்டுமாயின், நான் எடுக்கும் நடவடிக்கை கடுமையாக இருந்திருக்கும்.

அதேபோன்று சசிகலா சிறைக்குள் கையடக்க தொலைபேசியை வைத்திருப்பதாகவும் எனக்கு தகவல் கிடைத்தது. ஆனால் அவரிடம் நடத்திய சோதனையின்போது அதனை கண்டுபிடிக்க முடியவில்லை.

சசிகலாவுக்கு தற்போது 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறையில் விதிமுறைகளை மீறியமை உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கு மேலும் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Related posts: