சங்ரில்லா உணவகத்தில் உயிர் தப்பிய பிரபல கிரிக்கட் வீரர்.!

Tuesday, April 23rd, 2019

இலங்கையில் இடம்பெற்ற பல குண்டு தாக்குதல்களில் நட்சத்திர உணவகமான சங்ரில்லா உணவகத்திலும் தாக்குதல் இடம்பெற்றது.

இந்த தாக்குதல் இடம்பெற்ற தினத்தன்று இந்திய அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் anil kumbleளேவும் குறித்த உணவகத்தில் தங்கியிருந்துள்ளார்

குறித்த தினத்தன்று அதிகாலை 6.30 அளவில் சங்ரில்லா உணவகத்திலிருந்து யால வனப்பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

யால வனப்பகுதியில் சுற்றுலாவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையிலேயே தாம் குண்டு வெடிப்பு தொடர்பில் அறிந்து கொண்டதாக அவர் தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அத்துடன் இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் உதவியுடன் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சென்றதாகவும் அவர் குறித்த பதிவேற்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: