சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஈரானில் 25 பேர் காயம்!

Monday, July 23rd, 2018

ஈரானில் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 25 பேர் காயமடைந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெற்கு ஈரான் ஹர்மோஸ்கன் மாகாணத்தில் உள்ள லர் நகரத்துக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 அலகுகளாகப் பதிவானது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தில் இந்த நிலநடுக்கம் 5.4 அலகுகளாக பதிவாகியுள்ளது.

இதற்கு அடுத்தாற்போல, மேற்கு கெர்மன்ஷா மாகாணத்தில் மற்றொரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 அலகுகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சுலேமனியாஹ் மாகாணத்தின் எல்லைப் பகுதி முழுவதும் கடுமையாக உணரப்பட்டது. ஏராளமான கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கியதையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சாலைகளில் தஞ்சமடைந்தனர். சில கிராமங்களில் உள்ள கட்டடம் இடிந்து விழுந்ததில் 25 பேர் காயமடைந்தனர் என்று அந்த ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேற்கு ஈரான் பகுதியில் சென்ற நவம்பரில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 600-க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்ககது.

Related posts: