கோர விபத்து: பிரேசிலில் 21 பேர் உயிரிழப்பு!

Saturday, June 24th, 2017

தென்கிழக்கு பிரேசிலில் ஏற்பட்ட  பஸ் விபத்தில் சிக்கி குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதோடு 22 பேர் காயமடைந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

நேற்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட குறித்த விபத்தில் பலர் உடற்கருகி உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிரனைட் கற்களை சுமந்து வந்த டிரக் வண்டி ஒன்று தவறான திசையில் பயணித்து வந்ததாகவும் அது மறுபுறத்தில் வந்த பேருந்துடன் மோதுண்டதாகவும் இந்த விபத்து தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த இரு வாகனங்களும் வேகமாக மோதுண்டதைத் தொடர்ந்து பேருந்து தீப்பிடித்து எரிந்ததாகவும் உயிர்பிழைத்துள்ள பலர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான பேருந்துக்கு பின்னால் அம்புலன்ஸ் வண்டி ஒன்று பயணித்து வந்ததாகவும் அதில் வாகன சாரதி நோயாளி மற்றும் மருத்துவ உதவியாளர் என மொத்தம் மூன்று பேர் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விபத்தால் அம்புலன்ஸ் வண்டியில் இருந்த நோயாளிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: