கோர விபத்து: இந்தியாவில் 17 பேர் பலி

Tuesday, June 6th, 2017

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 17 பேர் பலியாகினர்

புது டெல்லியில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோன்டா நோக்கி பயணித்த பேருந்து ஒன்று பாரவூர்தியொன்றுடன் மோதியுள்ளதுஇந்த விபத்து நேற்று நள்ளிரவில் இடம்பெற்றுள்ளதுவிபத்து இடம்பெற்றவுடனேயே பேருந்தும், பாரவூர்தியும் தீப்பற்றியுள்ளது

இதனால் பேருந்தில் பயணித்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றனஇது தவிர படுகாயமடைந்த 20க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை, காஷ்மீரின் சம்பல் பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து இராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்த தாக்குதலின்போது ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts: