கொவிட்-19 வைரஸ்: ஜப்பானில் முதல் மரணம் !

ஜப்பானில் கொவிட்-19 வைரஸ் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் படுவேகமாக பரவிவரும் கொவிட்-19 வைரஸ் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 300-ஐ தாண்டியுள்ளது. மேலும், பல்லாயிரக்கணக்கானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜப்பான் நாட்டில் கொவிட்-19 வைரஸ் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்தார் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஜப்பான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொவிட்-19 வைரஸ் பாதிப்பால் முதல் மரணம் பதிவாகி உள்ளது என தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, கொவிட்-19 வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களில் சீனாவை சேர்ந்த ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது நினைவிருக்கலாம்.
Related posts:
அந்திராவில் 47 டிகிரி செல்சியசிற்கும் அதிகமான வெப்பம்!
மக்காவில் இருந்து 4 மில்லியன் பெறுமதியான தங்கத்துடன் வந்தவர் கைது!
தற்கொலை கார் குண்டுவெடிப்பில் 12 பேர் பலி!
|
|