கொவிட்-19 : அமெரிக்காவிற்கும் பரவும் அபாயம்!

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொவிட்-19 எனும் கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவிற்கும் பரவும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் காரணமாக வைரஸ் பரவலை தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டுமெனவும் அதற்கான நிதியை ஒதுக்குமாறும் குறித்த அதிகாரிகள் அமெரிக்க காங்கிரஸிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக இதுவரையில் இத்தாலி மற்றும் தென் கொரியாவில் 10 பேரின் உயிரைப் பறித்துள்ளது.
இதுவரையில் தென் கொரியாவில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக 1146 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இத்தாலியிலும் 322 பேர் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பதில் பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன!
8 வயதுச் சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் - பணிப்பாளர் உட்பட 6 பேரிடம் பொலிசாரிடம் வாக்குமூலம் - மே...
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருக்கின்ற...
|
|