கொரோனா வைரஸ் :சீனாவின் வுஹான் நகரத்தில் மீண்டும் இருவர் உயிரிழப்பு!

Thursday, April 9th, 2020

சீனாவில் கொரோனா ரைஸ் தொற்று ஆரம்பித்த வுஹான் நகரம் அமைந்துள்ள ஹூபாய் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இரண்டு பேர் மரணமாகினர்.

இந்த இரண்டு மரணங்களும் நேற்று பதிவாகியுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டு மூன்று மாதங்களுக்கு பின்னர் வுஹான் நகரம் திறக்கப்பட்ட நிலையில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.

சீனாவில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றாளிகள் 63 பேர் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 61 பேர் வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு வந்தவர்கள் என்று அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் அங்கு கொரோனா ரவைரஸ் தொற்று ஆரம்பித்த நாளில் இருந்து இதுவரை 81ஆயிரத்து 865பேர் தொற்றுக்கு உள்ளானவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: