கொரோனா வைரஸ்: சிங்கப்பூரில் 77 பேர் பாதிப்பு!

Wednesday, February 19th, 2020

கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.

அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றும் போதே சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் இந்த நிலையை கையாள முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 77 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 80 சதவீதமானோருக்கு சிறிய நோய் அறிகுறிகளே தென்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

எனவே அவர்கள் நிச்சயமாக குணமடைவார்கள் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 14 சதவீததிற்கும் குறைந்தளவானவர்களே நிமோனியா நிலைக்கு உள்ளாவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 தொற்றால் சர்வதேச ரீதியில் பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்து 873 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம் சீனாவின் வுபேய் பிராந்தியத்தில் கொரானோ தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 93 பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன் அந்த பிராந்தியத்தில் இதுவரை ஆயிரத்து 789 பேர் உயிழந்துள்ளனர்.

அதேநேரம் குறித்த தொற்றால் அங்கு ஆயிரத்து 807 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் அந்த பிராந்தியத்தில் இதுவரை 59 ஆயிரத்து 989 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை வுபேய் பிராந்தியத்தில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி 41 ஆயிரத்து 957 பேர் மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, அவர்களில் ஆயிரத்து 853 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அந்த நாட்டின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் கொரோனா தொற்றுக்குள்ளான 7 ஆயிரத்து 862 பேர் சிகிச்சைகளின் பின்னர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் சர்வதேச ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: