கொரோனா வைரஸை கையாண்ட வடகொரியாவுக்கு பிரகாசமான வெற்றி – கிம் ஜோங் உன் பெருமிதம்!

Friday, July 3rd, 2020

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயைத் தடுத்து நிறுத்துவதில் தனது நாடு ‘பிரகாசமான வெற்றி’ அடைந்துள்ளதாக, வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் பாராட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, வட கொரியா எல்லைகளை மூடி ஆயிரக்கணக்கானவர்களை தனிமைப்படுத்திய ஆறு மாதங்களுக்குப் பிறகு, வைரஸின் தாக்கம் குறித்து வியாழக்கிழமை ஒரு தொழிலாளர் கட்சி அரசியல் கூட்டத்தில் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் உரையாற்றினார்.

இதன்போது, ‘ஒரு நிலையான சூழ்நிலையை பராமரித்து, வீரியம் மிக்க வைரஸின் ஊடுருவலைத் தடுத்துள்ளோம். உலகளாவிய சுகாதார நெருக்கடி இருந்தபோதிலும் நிலையான தொற்றுநோய்க் எதிர்ப்பு நிலைமையைப் பேணுகிறோம்’ என கூறினார்.

மேலும், தொற்றுநோய்க்கு எதிரான நடவடிக்கைகளின் அவசர நிவாரணம் கற்பனை செய்யமுடியாத மற்றும் மீளமுடியாத நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்று அவர் மீண்டும் மீண்டும் எச்சரித்தார்.

வட கொரியா தன்னிடம் பூஜ்ஜிய வைரஸ் தொற்றுகுகள் இருப்பதாகக் கருதுகிறது. பெரும்பாலான ஆய்வாளர்கள் இது சாத்தியமில்லை என்று கூறுகிறார்கள்.

இருப்பினும், நாடு வைரஸுக்கு எதிராக விரைவாகச் செயற்பட்டு, அதன் எல்லைகளை மூடி, ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்தே ஆயிரக்கணக்கானவர்களை தனிமைப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: