கொரோனா : பிரித்தானியா மூத்த இராஜதந்திரி ஒருவர் பலி!

Thursday, March 26th, 2020

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்து பிரித்தானியாவின் மூத்த இராஜதந்திரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய தூதரகத்தில் துணைத் தலைவராக பணியாற்றிய 37 வயதான Steven Dick என்பவரே கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவர் ஹங்கேரியில் வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், Steven Dickஇன் இழப்பால் தாம் பேரழிவை சந்தித்துள்ளதாக அவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Steven Dick இன் மரணம் குறித்து வெளிவிவகார செயலாளர் கருத்து வெளியிடுகையில்,

“இந்த செய்தியை கேட்டு தாம் மிகவும் கவலையடைவதாகவும், Steven Dick ஒரு சிறந்த அர்ப்பணிப்புள்ள இராஜதந்திரி எனவும், கூறியுள்ளார்.

Related posts: