கொரோனா தொற்று: மாலைத்தீவில் முதலாவது மரணம் பதிவு!

Thursday, April 30th, 2020

உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் மாலைத்தீவில் முதலாவது மரணம் பதிவாகியுள்ளதுதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருந்த 83 வயதான வயோதிப பெண்ணொருவரே நேற்றையதினம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மாலைத்தீவில் இதுவரை 280 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன் அதில் 17 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர் எனவும் அந்நாடு அறிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.

Related posts: