கொரோனா தொற்று : பிரேசிலில் ஒரு இலட்சம் பேர் உயிரிழப்பு!

Monday, August 10th, 2020

பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றினால் பலியானோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தினை கடந்துள்ளது.

இந்நிலையில் தொற்றினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் சிவப்பு நிற பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன. ரியோ டி ஜெனீரோவிலுள்ள Copacabana கடற்கரையில் அரசு சாரா அமைப்பின் சார்பில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது கடற்கரை பகுதி முழுவதும் சிவப்பு நிற பலூன்கள் மணலில் நடப்பட்டிருந்த சிலுவையில் கட்டப்பட்டிருந்தன.

அதன்பின்னர் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஒரே நேரத்தில் ஆயிரம் பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன. இதேவேளை பிரேசிலில் கொரோனாவால் இதுவரை 29 இலட்சத்து 62ஆயிரத்து 442பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: