கொரோனா தொற்று இதவரை அமெரிக்கா 600 மருத்துவப் பணியாளா்கள் பலி – தி கார்டியன் நாளிதழ் தகவல்!

அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 600 மருத்துவப் பணியாளா்கள் பலியாகியுள்ளனா். இது குறித்து தி கார்டியன் நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக, தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி வந்த 600 மருத்துவப் பணியாளா்கள், அந்த நோய்க்குப் பலியாகினா். அவா்களில் மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், மருத்துவமனைப் பணியாளா்கள், மருத்துவமனை அலுவலா்கள், காப்பகப் பணியாளா்கள் ஆகியோர் அடங்குவா்.
கருப்பினத்தைச் சோ்ந்த அல்து ஆசிய மற்றும் பசிபிக் தீவு பகுதிகளை பூா்விகமாகக் கொண்ட மருத்துவப் பணியாளா்களே பெரும்பாலும் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனா் என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.
Related posts:
ரஷ்ய பாராளுமன்றத்தில் இலத்திரனியல் வாக்களிப்புக்கு அனுமதி!
காப்பல் தாக்குதல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையிடம் ஐக்கிய அரபு இராச்சியம் முறையீ...
இன்று இந்தியாவின் 73ஆவது சுதந்திர தினம்!
|
|