கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களில் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களே 80 வீதம்!

Wednesday, February 5th, 2020

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 490 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 80 வீதமானோர் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களாவர் என சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவர்களுள், 75 வீதமானோர் இருதய மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம், ஹ{பே மாகாணத்தில் மாத்திரம் நேற்றைய தினம் 65 உயிரிழப்புகள் பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேநேரம், சீனாவுக்கு வெளியே ஹொங்கொங்கிலும். பிலிப்பைன்ஸிலும் தலா ஒருவர் பலியானார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, 28 நாடுகளில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று சர்வதேச ரீதியில் நெருக்கடி நிலையை அடைவதை தடுப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரெஸ் அடெனொம் கெப்ரியேஸஸ் இதனைத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக சீனா மேற்கொண்டுவரும் முயற்சிகள் அதன் பரவலைத் தடுப்பதற்கான சிறந்த வழியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts: