கொரோனா கோரத் தாண்டவம் – உலக நாடுகளுக்கு சீன ஜனாதிபதி அழைப்பு!

உலகளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில், பொருளாதாரத்தைக் காக்க ஒன்றிணையுங்கள் என உலக நாடுகளுக்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.
சீனாவின் வுஹானில் உருப்பெற்றதாக கூறப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பல ஆயிரம் உயிர்களை சர்வதேச நாடுகள் இழந்து நிற்கின்றன.
இதேவேளை, உலகம் முழுவதும் பல நாடுகள் முடக்கப்பட்டிருக்கின்றன. இதனால் பொருளாதாரத்தில் பாரியளவிலான வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. சர்வதேச சந்தைகள் முடங்கிப் போயிருக்கின்றன.
இந்நிலையில், சீன ஜனாதிபதி தற்போது உலக நாடுகளுக்கு அவசர அழைப்பு விடுத்திருக்கிறார்.
அவர் பேசியதாக குறிப்பிட்டு சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களில்,
”பெரும் பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்த உலக நாடுகள் முன்வரவேண்டும். இதன் மூலம் கொரோனா தொற்று நோயால், உலகமே மந்தகதியில் உள்ள சூழலில், உலகின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும்.
உலகளாவிய சந்தையுடைய விநியோகச் சங்கிலியின் ஸ்திரத் தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Related posts:
|
|