கொரோனா அவச்சுறுத்தல் : அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்தது.

Monday, May 18th, 2020

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போது உலகின் 212 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் இந்த வைரஸ் தொற்றால், 15 இலட்சத்து 7 ஆயிரத்து 798 பாதிக்கப்பட்டுள்ளதுடன், 90 ஆயிரத்து 113 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 47 இலட்சத்து 44 ஆயிரத்து 516 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரசால் அதிகம் பாதிப்பு அடைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடமும், ரஷ்யா இரண்டாவது இடமும், ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: