கொரோனா அச்சுறுத்தல்: இதுவரை 619,467 உயிரிழப்பு!

சீனாவின் – வுஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா, பிரேஷில், ரஷ்யா, இந்தியா, பிரித்தானியா, ஸ்பைன் மற்றும் இத்தாலி எங்கும் உச்சம் தொட்டு உலக நாடுகளை அழித்து வருகின்றது.
இந்த வைரஸ் தொற்று காரணமாக இன்று 22 காலை 8.30 மணி வரை 213 நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் இரு கப்பல்கள் அடங்கலாக உலக நாடுகளில் ஒரு கோடி 50 இலட்சத்து 93 ஆயிரத்து 712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களில் 6 இலட்சத்து 19 ஆயிரத்து 467 பேர் உயிரிழந்துள்ளதுடன், 91 இலட்சத்து 10 ஆயிரத்து 724 பேர் குணமடைந்துள்ளனர்.
அத்துடன் தற்போதுவரை 53 இலட்சத்து 63 ஆயிரத்து 521 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இவர்களில் 63 ஆயிரத்து 692 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை தொடர்பிலான மனு இன்று விசாரணை!
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷிக்கு ஹரியானா ரூ.3 கோடி பரிசு அறிவிப்பு!
வீதி செப்பனிட்டும் குறியீடுகள் இன்னமும் பொறிக்கப்படவில்லை - நிதி இன்மையே காரணம்என்கிறது வீதி அபிவிரு...
|
|