கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க முடியாமலும் போகலாம் – பிரித்தானிய பிரதமர் தெரிவிப்பு!

Wednesday, May 13th, 2020

கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க ஒரு வருடம் ஆகலாம் அல்லது கண்டுபிடிக்க முடியாமலும் கூட போகலாம் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் இங்கிலாந்து 4வது இடத்தில் உள்ளது. அங்கு 2 இலட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், ஜூன் 1ஆம் திகதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், இன்றுமுதல் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அது தொடர்பாக 50 பக்கங்கள் கொண்ட வழிகாட்டு நெறிமுறைகளை பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று வெளியிட்டார்.

அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் மேலும் கூறுகையில் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகள் வேகமாக நடக்கின்றன.

இங்கிலாந்தில் ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் ஆய்வாளர்கள் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொரோனா வைரஸுக்கான முழுமையான தடுப்பூசி கண்டறிய ஓராண்டுக்கு மேல் ஆகலாம். ஒருவேளை தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாமலேயே கூட போகலாம். எனவே, எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: