கொரோனாவின் முதல் அலை குறைந்து வரும் நாடுகளில் ஆண்டு இறுதிக்குள் மீண்டும் தாக்கம் அதிகரிக்கலாம் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Tuesday, May 26th, 2020

கொரோனா தொற்று குறைந்து வரும் நாடுகளில் வைரஸ் பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கும் போது, அங்கு கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உடனடியாக உருவாகும் வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

தற்போது உலகின் முதலாவது கொரோனா வைரஸ் அலையே இருப்பதாகவும் குறித்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் பாதிப்பு பல நாடுகளில் குறைந்து வரும் நிலையில், மத்திய மற்றும் தென் அமெரிக்கா, தெற்காசியா மற்றும் ஆபிரிக்காவில் வைரஸ் இன்னும் பரவி வருகிறது. அதன்படி, தற்போது கொரோனாவின் முதல் அலை குறைந்து வரும் நாடுகளில் இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் அவசர சேவை தலைவர் டாக்டர் மைக் ரியான், ஜெனீவாவில் நடந்த இணையம் மூலமான செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: