கொரோனாவின் உருவாக்கம் குறித்து 14ஆம் திகதி சீனாவில் விசாரணை!

Tuesday, January 12th, 2021

கொரோனா வைரஸ் உருவான விதம் குறித்து நேரடி விசாரணை நடத்துவதற்காக, உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர்குழு நாளை மறுதினம் 14ஆம் திகதி சீனாவுக்கு நேரில் செல்கிறது.
உலக சுகாதார நிறுவன நிபுணர் குழுவின் வருகைக்கு சீனா அனுமதி அளித்தது. இதை சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் அறிவித்தது.
இதனையடுத்து எதிர்வரும் 14ஆம் திகதி உலக சுகாதார நிறுவனத்தின் 10 பேர் கொண்ட நிபுணர் குழு, சீனாவுக்கு சென்று நேரடி விசாரணை நடத்தும் என்று அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
அக்குழு வுகான் நகருக்கு செல்லும்போது, சீன நிபுணர்களும் உடன் செல்வார்கள் என்றும் கூறியுள்ளது. இதன்மூலம் கொரோனா உருவானது பற்றிய விசாரணையில் நிலவிய தாமதம் முடிவுக்கு வந்துள்ளது.
கொரோனா வைரஸ் கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது. அங்கு விலங்குகள், பறவைகள், ஊர்வன ரகங்கள் ஆகியவற்றை உயிருடன் விற்கும் சந்தையில் இருந்து உருவாகி, மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்று உலகம் முழுவதும் பரவலாகக் கருதப்படுகிறது. எனினும் இதை சீனா மறுத்து வருகிறது.
கொரோனா வைரஸ் உருவான விதம் குறித்து பாரபட்சமற்ற, சுதந்திரமான, விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு மே மாதம் உலக சுகாதார நிறுவனத்தின் உலக சுகாதார சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: