கொரோனாவால் நிதி நெருக்கடி: மத குருக்களுக்கு சம்பள நிறுத்தம் – போப்பாண்டவர் உத்தரவு!

Friday, March 26th, 2021

கொரோனா வைரஸ் தொற்று நோயால் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார ரீதியில் பெரும்பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இதற்கு வத்திக்கானும் விதிவிலக்கல்ல.
வத்திக்கானில் கொரோனாவால் அருங்காட்சியகங்கள், புனித தலங்கள், சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு 50 மில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.500 கோடி) வருமான இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த வருமான இழப்பு காரணமாக கார்தினல்களுக்கும், பிற மத குருக்களுக்கும் சம்பள நிறுத்த உத்தரவை போப்பாண்டவர் பிரான்சிஸ் பிறப்பித்துள்ளார். இது அடுத்த ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது. கார்தினல்களை பொறுத்தமட்டில் இந்த சம்பள நிறுத்தம் 10 சதவீத அளவில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் நிதி நெருக்கடி காரணமாக வேலை இழப்புகள் செய்யப்படமாட்டாது என போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: