கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க கடற்படை!

Monday, April 10th, 2017

வட கொரியாவின் ஏவுகணை சோதனை குறித்து கவலைகள் எழுந்துள்ளதற்கு மத்தியில் அமெரிக்க கடற்படையை கொரிய தீபகற்பத்தை நோக்கி செல்ல அமெரிக்க இராணுவம் ஆணை பிறப்பித்துள்ளது.

கார்ல் வின்சன் என்று அழைக்கப்படும் அந்த அமெரிக்க கடற்படை கப்பலில் ஒரு போர் விமானம் தாங்கியும் மற்றும் பிற போர் கப்பல்களும் உள்ளன

தற்போது பசிபிக் கடலின் மேற்கு பகுதியை நோக்கிச் செல்லும் அந்த கப்பல், அந்த பிராந்தியத்தில் வரும் தாக்குதலை எதிர்கொள்ள தயாராக இருப்பதற்கான ஒரு விவேகமான நடவடிக்கை என அமெரிக்க பசிபிக் கமாண்ட் விவரித்துள்ளது.

வட கொரியாவிடமிருந்து வரும் அணு அச்சுறுத்தல்களை அமெரிக்கா தனியாக எதிர்கொள்ள தயாராக உள்ளது என அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

“அஜாக்கிரதையான, பொறுப்பற்ற, மற்றும் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கும் ஏவுகணை சோதனைகள் மற்றும் ஆணு ஆயுதங்களுக்கான ஆற்றலை பெறும் முயற்சி ஆகியவற்றால் அந்த பிராந்தியத்தின் முதல் அச்சுறுத்தலாக வட கொரியா உள்ளது” என அமெரிக்க பசிபிக் கமாண்டின் செய்தி தொடர்பாள டேவ் பென்ஹாம் தெரிவித்துள்ளார்.

பத்து அணு சக்தி விமானந் தாங்கிகளை கொண்டுள்ள யுஎஸ்எஸ் கார்ல் வின்சன், ஏவுகணைகளை அழிக்கும் வல்லமை கொண்ட இரண்டு கப்பல்கள் ஆகியவை நிறுவப்பட்டுள்ள கடற்படையில் அடங்கும்.

 

Related posts: