கேட்விக் விமான நிலையத்தை வாங்குகிறது பிரான்ஸ் குழுமம்!

Friday, December 28th, 2018

பிரிட்டனில் அண்மையில் ஆளில்லா விமானங்கள் பறந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பரபரப்பை ஏற்படுத்திய கேட்விக் விமான நிலையத்தை பிரான்ஸின் வின்சி குழுமம் கையகப்படுத்துகிறது.

அதிக விமானங்கள் வந்து செல்வதில் பிரிட்டனின் இரண்டாவது பெரிய விமான நிலையமான கேட்விக்கின் பங்குகளை 370 கோடி டாலர் (சுமார் ரூ.26,000 கோடி) செலவில் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை வின்சி குழுமம் மேற்கொண்டுள்ளது.

இதன் மூலம், நிலையத்தின் 50.01 சதவீத பங்குகள் வின்சி குழுமத்தின் கைவசம் வருவதாக அந்தக் குழுமம் தெரிவித்துள்ளது. ஐரேப்பிய யூனியனிடமிருந்து பிரிட்டன் விலகும் (பிரெக்ஸிட்) நேரத்தில், இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கேட்விக் தவிர, பிரேஸில், ஜப்பான், செர்பியா ஆகிய நாடுகளின் விமான நிலையங்களையும் வின்சி குழுமம் அண்மையில் கையகப்படுத்தியுள்ளது.

Related posts: