கெர்ரி பெலன்ஸ் விளையாடுவது சந்தேகம்!

Friday, July 21st, 2017

தென்னாபிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் கெர்ரி பெலன்ஸ் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பெலன்ஸ்க்கு கையில் விரல் முறிவு ஏற்பட்டது. இந்த காயம் இதுவரை குணமாகாத நிலையில் அவர் அடுத்த போட்டியில் களமிறங்குவது கேள்விக்குறியாகியுள்ளது.

பெலன்ஸ் விளையாட மாட்டார் என உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அவருக்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்படுவார் என இங்கிலாந்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ளதுநான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 27ஆம் திகதி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: