கென்யாவில் டாங்கர் லொறி விபத்து – 40 பேர் பலி!

Sunday, December 11th, 2016

கென்யாவின் முக்கிய சாலையில், எரிபொருள் டாங்கர் லொறி ஒன்று விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியதில் சுமார் நாற்பது பேர் கொல்லப்பட்டனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

தலைநகர் நைரோபி மற்றும் நைவாஷாவிற்கு இடையே உள்ள சாலையில் இருக்கும் செங்குத்தான மலையிலிருந்து இறங்கி கொண்டிருந்த போது அந்த டாங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்ககுள்ளானது என்று கென்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திசைமாறிய அந்த வாகனம் எதிரே வந்து கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியதில், 11 பிற வாகனங்கள் ஒன்றோடொன்று இடித்து விபத்துக்குள்ளானது.

அதில் ஒரு வாகனம் 14 பயணிகளை உள்ளடக்கிய சிற்றுந்தாகும்.

சிலர் கடுமையான தீயில் சிக்கிக் கொண்டனர் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், அரசு மருத்துவமனைகளில் குறைந்த சேவைகளே காணப்படும் இந்த சமயத்தில் அந்த விபத்து நேர்ந்துள்ளது.

_92921035_gettyimages-628989650-1 (1)

Related posts: