கென்யாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உடல் கருகி பலி!

Friday, June 29th, 2018

கென்யா நாட்டில் காய்கறி சந்தையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 15 பேர் பரிதாபமாக உடல் கருகி பலியாகியுள்ளதுடன் 70 இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கென்யா தலைநகர் நெய்ரோபியில் உள்ள காய்கறி சந்தையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து படிப்படியாக அருகில் இருந்த கட்டிடங்களுக்கும் பரவியது.

குறித்த தீ விபத்தினால் கட்டிடங்கள் சிதைந்து பலவீனமாக இருப்பதால் தீயில் உயிரிழந்தவர்களின் சிலரது உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts: