குவைற்றிலிருந்து வட கொரியர்கள் வெளியேற்றம்!

Monday, September 18th, 2017

குவைத் அரசு தனது வட கொரிய தூதுவரை வளை குடா பிராந்தியத்தை விட்டு வெளியேற, ஒருமாத கால அவகாசம் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன .

அத்துடன் தமது இராஜதந்திர உறவுகளயும் , கீழான ஒரு நிலைக்கு கொண்டுவருவதாக நேற்று ஞாயிறன்று , குவைத்தின் மூத்த உயர் அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார் .

இங்கு அலுவலகத்தில் நால்வர் மாத்திரமே பணிபுரிய முடியுமென்ற கட்டுப்பாடும் கொண்டுவரப்பட்டுள்ளது . இரு வாரங்களுக்கு முன்பு , குவைத் அதிபர் வாஷிங்டனுக்கு மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை  இடம்பெறுகிறது ,

இரண்டு அல்லது மூன்று வருடங்களில் முடிக்க வேண்டிய சில வேலைத் திட்டங்களுக்கு எடுக்கப்பட்ட வட கொரிய தொழிலாளிகளின் , இந்த வேலை முடிந்தபின்னர் , பின்னர் மீண்டும் நாட்டுக்குள் வர  அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள் . குவைத்தில் 2,000 தொடக்கம் 2,500 வரையிலான வட கொரியர்கள் பணிபுரிகிறார்கள் . வளைகுடா பிராந்தியத்தில் இன்னும் பல ஆயிரக்கணக்கானவர்கள் பணிகமர்த்தப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது

Related posts: